Breaking News
recent

வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில்


வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): வில்வாரண்ய சேத்திரம்
அமைவிடம்
ஊர்: வெள்ளூர்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: திருக்காமேஸ்வரர்
தாயார்: சிவகாமசுந்தரி
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: ஐஸ்வரிய தீர்த்தம்
வரலாறு
தொன்மை: 2000 ஆண்டுகள்
வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் வெள்ளூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் திருக்காமேசுவரர் என்றும், அம்பாள் சிவகாம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புணரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார். இச்செய்தி கல்வெட்டில் உள்ளது.[1]

கோயில் அமைப்பு

சிவாலயமானது இரண்டு நுழைவாயில்களைக் கொண்டது. ஒன்று தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வ சிலைகள் உள்ளன.[1]

சன்னதிகள்

மூலவரும் அம்பாளும்

மூலவர் திருக்காமேசுவரர் சுயம்பு லிங்கம் ஆவார். இவரை மன்மதனும், ரதியும், திருமகளும் வழிபட்டுள்ளனர்.[1]
சிவாலயத்தின் தென் மேற்கில் விநாயகர் சன்னதியும், மேற்கே வள்ளி தெய்வானை உடனுறை சண்முகரின் சன்னதியும் உள்ளது. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ரதியுடன் மன்மதன் ஈசனை வணங்கியவாறு உள்ளனர். இதன் அருகே தலவிருட்சம் அமைந்துள்ளது. பக்தர்கள் வில்வ மரத்தினை திருமகளாக வழிபடுகின்றனர். ஆலயத்தின் வடக்கே திருமகள் சன்னதி உள்ளது.[1]

படக்கோப்பு



நந்தி பகவான்

நந்தி மண்டபத்துடன் கோயில்
பலிபீடம் நந்தி மண்டபம்
யாளி வரிசை கோஸ்டத்தில் அமைந்துள்ளது
முசுகுந்தன் வழிபாடு
வள்ளி தெய்வானை சண்முகநாதர்
கோஷ்ட பூதங்கள்
மன்மதன் மற்றும் ரதி வணங்கியபடி உள்ளார்
தல விருட்சம்
கோஷ்ட பூதங்கள்

மகாலட்சுமி சன்னதி 
 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.  Refer : https://ta.wikipedia.org/s/5njf

Tag: ishwarya mahalakshmi temple tamil nadu
aishwarya mahalakshmi temple vellore
musiri ishwarya mahalakshmi temple
vellore musiri mahalakshmi temple
Iswariya Mahalakshmi & Thirukameswarar temple
vellur_iswariya_mahalakshmi
thirukameswar temple trichy
thirukameswar temple musiri
Tamilnadu Tourism: Thirukameeswarar Temple, Vellur, Trichy
mahalakshmi temple in trichy
aishwarya mahalakshmi temple musiri
United Village of Vellur
Vellur 621202
Vellur Shiva Temple
வெள்ளூர் சிவன்கோவில்
வெள்ளூர் திருக்காமேஸ்வரர்
 சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி திருக்கோயில்
SmartMGA

SmartMGA

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.